கண் தானம் மயானத்தில் மறைக்கும் கண்களுக்கு மறுபிரவி கொடுப்போம் மற்றவர்களுக்காக.
   
 
  Kavithai
 



 

                                                  வேண்டாம் 

என் கல்லறை வரும் வழியெங்கும் 
முட்களை தூவுங்கள்.... 
ஒருவேளை அவளின் கண்ணீர்பட்டு 
என் காதல் உயிர்த்தெழலாம் 
எனக்கு விருப்பமில்லை 
மீண்டும் இறந்துவிட... 
மரித்தகாதல் மரித்ததாயிருகட்டும்....




 
                                            நான்
       அமாவாசையன்று பிறந்ததாலோ என்னவோ.........
       இருண்டே இருக்கிறது என் வாழ்க்கையும்..............

                            வாழ்வியல் ஆதாரம்
       கருவறை முதல் கல்லறை வரை...........
       சில்லறை இல்லையென்றல் ஒன்றுமில்லை.........

நிலவு  - ஹைக்கூ கவிதை

நிலவு 
மழையில் நிலவு 
தெரியுமா? 
நான் கண்டேன், 
அவள் 
குடையை மறந்து 
வருகையில்….. 




ஏழை விவசாயி 

ஏழை விவசாயி 
விதை விதைதான் 
வேகமாக வளர்ந்தது 
          அவன் வாங்கிய கடன் ..............




அழுகு 

இயற்கைக்கு பசுமை அழுகு 
செயற்கைக்கு புதுமை அழுகு 
மொழிக்கு தமிழ் அழுகு 
தமிழிற்கு கவிதை அழுகு 

நட்பிற்கு உதவி அழுகு 
காதலுக்கு வெற்றி அழுகு 
மண்ணிற்கு பெண் அழுகு 
பெண்ணிற்கு புன்(நகை) அழுகு 

கடலுக்கு அலை அழுகு 
உடலுக்கு உயிர் அழுகு 

என்னை எழுத வைத்த தமிழும் 
அதை தாங்கியே தமிழ்நாடுமே எனக்கு அழுகு 

 


ம்ம்ம் 

அவள் அன்று 
பேசியே வார்த்தைகளை 
இன்றும் நினைவில் வெய்த்துள்ளது 
என் இதயம் ...... 

ஆம் இன்று நான் கல்லறையில் 
அவளோ மணவரையில்....... 




வெட்கம் - காதல் கவிதை

வெட்கம் 

பெண்ணே! 
தென்றல் உன் 
கூந்தல் அசைவில் 
நடனம் கற்க்கிறது.... 

உன் கூந்தலிள்ளிருந்து 
ரோஜா விழுந்ததன் காரணம்? 
தன் அரசியின் கூந்தலில் 
இருந்த வெட்கத்தில?..... 


நகல் நிழலாக - காதல் கவிதை

நகல் நிழலாக 

பெண்ணே! 
உன்னை நகல் 
எடுப்பதற்காக 
தினம் தினம் 
வந்து போகிறது 
சூரியன் ... 
நகல் நிழலாக.. 


பாத சுவடு - காதல் கவிதை

பாத சுவடு 

தோழியே... 
ஆயிரம் பேர் 
கடந்து சென்ற 
கடற்க்கரை மணலில்.. 
கண்டறிவேன் - உன் 
அழகிய பாத சுவடை 
நீ.... 
கடந்து சென்றது 
என் இதய சுவடல்லவா?...




அரசு துவக்கப்பள்ளி 

மாணவர்களே இல்லாத 
வகுப்பறையும் 
ஒவ்வொரு வருடமும் 
தேர்ச்சி பெற்று 
முன்னேறுகிறது 
தேர்வு எழுதாமல்...........


கவிஞன் - காதல் தோல்வி கவிதைகள்

கவிஞன் 

எனக்கும் கவிதை எழுதத் தெரியுமென்று எனக்கே தெரியவைத்தவன் நீ! 
உண்மையைச் சொன்னால் இன்று வரை நானும் கவிதையெல்லாம் எழுதியதில்லை. 
ஆனால் உன்னை நினைத்து என்ன எழுதினாலும் கவிதையாகி விடுகிறது. 
என்னை கவிஞனாக்கிய நீயேதான் என்னை நடிகனாகவும் மாற்றினாய். 
நீ பிரிந்ததும் மரித்துப் போனவன், உயிரோடிருப்பதைப் போல நடித்துக் கொண்டிருக்கிறேன். 
ஆனால் கவிதை வந்த அளவுக்கு நடிப்பு வரவில்லை. 
கவிஞனுக்கும் நடிகனுக்குமிடையே நடந்த போராட்டத்தில் கவிஞன் ஜெயிக்கிறான். ஆனால் காதல் தோற்கிறது! 

 


அவள் விழி அசைவினில் 

காகிதமின்றி 
ஒரு கவிதை 
எழுதுகோல் இன்றி 
எழுதபடுகிறது 
உதடுகள் திறவாமல் 
ஓர் கவியரங்கம் 
ஒவ்வொரு நாளும் 
அவள் விழி அசைவினில்..... 


முயற்சி - வாழ்க்கை கவிதை

முயற்சி 

பூவெல்லாம் காய்ப்பதில்லை 
காயல்லாம் கனிவதில்லை 
கனிஎல்லாம் சுவைபதில்லை! 
மனிதர்களிலும் அப்படிதான், 
பிறப்பவரெல்லாம் சிறப்படைவதில்லை; 
சிறப்புடையோர் சிலரே ! 
அந்த சிலரில் ஒருவராக வர 
நீ முயற்சிக்கலாமே! 

 
நண்பர்களாக  - நண்பர்கள் கவிதை

நண்பர்களாக  

இந்த உலகத்தியில் 
நான் வாழ்ந்திட 
முன்றே முன்று 
இடம் வேண்டும் 
என்றும் நான் 
உன் தோழியாக.................. 
நீ என் 
தோழனாக ...................... 
மற்றவர் கண்களுக்கு 
என்றும் நாம் 
நண்பர்களாக ................ 
தெரிந்திட வேண்டும் 
 

குழந்தையாக  - வாழ்க்கை கவிதை

குழந்தையாக  

நூறு வருடம் அல்ல 
கோடி வருடம் 
வழத்திட ஆசை 
எனக்கு 
என் அன்னை 
மடியில் 
குழந்தையாக


 கோழை  - வாழ்க்கை கவிதை

கோழை  

என் கண்களுக்கு 
கண்ணிர் சிந்த தெரியாது 
ஏன் என்றால்? 
ஏன் இதயத்திற்கு 
வலிகளை தாங்க தெரியும் 
வலிகளை மறைக்க இதயம் , 
பழகிகொண்டது 
எவ்வளவோ முயன்றும் 
என கண்ணீரை மறைக்க முடியவில்லை 
அவளிடம்..... 
என்ன செய்வது? 
பெற்று எடுத்தவளுக்கு தெரியாத 
அவள் உயிரை பற்றி 
என்றும் 
உன் முன்னால் 
நான் கோழை தான் 
என்பதில் பெருமை எனக்கு 
அம்மா ...........


நட்பு  - நண்பர்கள் கவிதை

நட்பு  

இதயத்தின் வழியாக 
கண்கள் பேசுவது 
காதல் 
உரிமையின் வழியாக 
உணர்வுகள் பேசுவது 
நட்பு


malargal - காதல் தோல்வி கவிதைகள்

malargal 

அன்று அவளுக்காக 
என்னை 
நீ கொன்றாய்... 
ஆனால், 
அவளோ உன்னை 
கொன்றுவிட்டாள்... 
இன்று- 
உன் கல்லறையின் 
அருகில் யார் 
இருக்கிறார் 
என்னை தவிர!!!




maezhuguvarthi 

மெழுகுவர்த்திக்கு 
உயிர் கொடுக்க 
உயிர் விட்டது 
"தீக்குச்சி" 
அதை, 
நினைத்து நினைத்து 
உருகியது 
"மெழுகுவர்த்தி"...


En uyir - Others

En uyir 

நான் உயிரோடு 
இருப்பது எல்லோருக்கும் 
தெரியும்... 
ஆனால், 
என் உயிர் 
உன்னோடு இருப்பது 
யாருக்கும் தெரியாது 
உன்னை தவிர.....


mudhal dheivam - Others

mudhal dheivam 

கல்லில் செதுக்கும் 
சிலையைவிட 
கருவில் சுமக்கும் 
தாய் தன 
முதல் தெய்வம்....

 
 kanneer - காதல் தோல்வி கவிதைகள்

kanneer 

காதலித்தபோது கைவிட்டு 
சென்றவனே...! 
கால் தவறி கூட 
என் கல்லறை பக்கம் 
வந்துவிடாதே 
என் கல்லறை பூக்கள் 
கூட கண்ணீர் சிந்தும்.....


கனவாகிடக் கூடாதா? - Others

கனவாகிடக் கூடாதா? 

என்னால் 
நினைத்து பார்க்க முடியவில்லை 
நீயில்லாமல் நான் சந்திக்கும் 
இந்த துயர நாட்களை 

ஒரு சில நாட்கள் தான் 
உன்னுடன் பேசவில்லை 
இதர நாட்களில் 
நாம் பேசவில்லையே என்ற 
என் தயக்கமே 
இந்த இடைவெளிக்கு 
காரணமாகிவிட்டது 

இன்று என் 
ஒவ்வொரு நொடியிலும் 
அதற்க்கான விளக்கம் 
அளித்துக் கொண்டிருக்கிறேன் 
நீ கேட்கப் போவதில்லை 
என்று தெரிந்தும் 

நீ என்னுடன் 
இருக்கும் வரை 
என்னை விட்டு உன்னால் 
எங்கே சென்று விடமுடியும் 
என்ற என் நம்பிக்கையின் 
அலட்சியமாக இருந்தேன் 

இன்று 
என்னிடமே நீ சொல்லாமல் 
சென்று விட்ட பிறகுதான் 
காலம் கடந்துவிட்டதை 
அறிந்து துடிக்கிறேன் 

நான் காணாத 
ஓர் கனவாகிடக் கூடாதா? 
நீ என்னைக் கடந்து போனது..!!!!


மறக்க நினைத்தாலும்..!!! - Others

மறக்க நினைத்தாலும்..!!! 

நீ வேறு, நான் வேறல்ல 
என்பதாய் வளர்ந்தது 
நம் நட்பு 

நினைத்துக் கூட 
பார்க்கவில்லை 
நீ என்னை 
பிரிவாய்யென்று 

என்னை நீ 
மறந்ததை நினைத்து 
துடித்துப் போகிறேன்! 

எதை நினைப்பேன் 
எதை மறப்பேன் 

நான் உன்னை 
சந்திக்காமலே 
இருந்திருக்கலாம் 

என் உயிரையும் தாண்டி 
சென்று விட்டது 
உன் நினைவுகள் 

உன்னை மறப்பதா 
என்னையே மறப்பதா 
முடிவெடுக்க முடியாமல் 
தவிக்கிறேன் 

உன்னை மறக்க நினைத்தால் 
என்னையே மறக்க செய்கிறது 
உன் நினைவுகள்

 
கண் தானம் - வாழ்க்கை கவிதை

கண் தானம் 

மயானத்தில் மறைக்கும் கண்களுக்கு 
மறுபிரவி கொடுப்போம் 
மற்றவர்களுக்காக. 




மழை 

இரசித்து கண் கொட்டாமல் பார்த்தேன் ஜன்னல் வழியே 
மெல்லிய தென்றல் மேனி தழுவியது 
தூறல் முகத்தில் மோதியது 
கதவில் தொங்கிய திரைச் சேலை படபடத்தது 
நிதானமாக ஆரம்பித்த மழை வேகம் பிடித்தது 
மெய் மறந்து நின்றேன் 
நானும் மழையும் மட்டுமே அங்கு 
என்ன ஒரு சப்தம்; என்ன ஒரு கம்பீரம் 
சாரல் பட்டு சிலிர்க்கும் என் மேனி 
காற்று வேகமாக அடித்தது 
மழை சற்றே அலைக்கழிந்தது 
பட்டென அறைந்து சாத்தியது ஜன்னல் கதவு 
என் எண்ணம் இடமாறியது 
சகதியாய் ஓடும் மழை நீர் 
முகம் சுளித்து, அருவருப்புடன் அதில் நடக்கும் மனிதர்கள் 
குடை ஒரு கையில்; சேலை பாவடையுடன்


மெய்யாக...!!! - காதல் தோல்வி கவிதைகள்

மெய்யாக...!!! 

எனக்காக 
பொய்யாக 
ஒருமுறை 
நீ கண்ணீர் விடுவாய் எனில், 
உனக்காக மெய்யாக 
இறக்க தயாராக இருக்கிறேன்...!!!

 
**என்னவள் வேறோருதியாய்** - காதல் கவிதை

**என்னவள் வேறோருதியாய்** 

விழிகளில் விழுந்த உன்னை 
என் விழி வழி சுமேந்தேன்... 

காலம் கடந்தபின்பு 
என் விழிகளுக்கு 
பார்வை இல்லை... 

---என்னவள் வேறோருதியாய்--- 


--சொல்லாமலே-- - Others

--சொல்லாமலே-- 


அதிகமாய் பேசுவதால் என்னவோ??? 
ஆண்களில் நான் வாயடன் 
என்கிறார்கள்... 

அழகாய் பேசியதால் என்னவோ??? 
முதல் பரிசு 
என்கிறார்கள்... 

கொஞ்சி பேசியதால் என்னவோ?? 
குழந்தையின் முத்தம் கிடைத்தது 
என்கிறார்கள்... 

அடி பெண்ணே 
என்னை என்ன செய்தாய் நீ??? 
நீ என்னிடம் பேசுவதற்காக 
நான் யார் யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறேன்... 

"சொல்லிவிடு காதலை 
இல்லை,என்னை சொல்லவாவது விடு " 
ஊமையாகி போகிறேன் 
என்னருகே நீ இருந்தால்... 

--சொல்லாமலே--

காலம் கடந்து வந்த ஞானம் - வாழ்க்கை கவிதை

காலம் கடந்து வந்த ஞானம் 

கோபம் என்னும் புயல் 
என்னுள் சீறியது - அதனால் 
வேதனை மிகுந்த வாழ்வே 
நிரந்தர சொந்தமாய் போனது | 

பேராசை எனும் தீ என்னுள் 
கொழுந்து விட்டு எரிந்தது - அதனால் 
பாசம் என்ற சொல்லே என்னிடம் 
விடை பெற்றுச் சென்றது | 

பொறமை என்னும் அரக்கன் 
என்னுள் குடிபுகுந்து நின்றான் - அதனால் 
அன்பு என்னும் பண்பே - என் 
அகராதியில் தொலைந்து போனது | 

ஆணவம் எனும் பேய்க்கு 
நான் அடிமையாகிப் போனேன் - அதனால் 
நான் மனிதன் என்ற உணர்வே 
என்னுள் விலகிப் போனது | 

ஜாதி எனும் தொழு நோய் 
என்னுள் பரவி நின்றது - அதனால் 
தினமும் ஒரு போர்களத்தில் 
நான் விழுந்து விழுந்து எழுந்தேன் | 

இன்று மனசாட்சி குரல் கொடுக்கிறது 
ஆனாலும் எழ முடியாத நிலையில் இன்று நான் | 
கரையை கடந்து விட்ட பின் பேரலைகளுக்கு 
யார் தடை போடா முடியும்? 

காலம் கடந்து வந்த ஞானத்தால் 
நிஜங்களை தொலைத்த நிழலாக 

இன்று நான்...  

CLOCK
 
நீயே ஒரு கவிதை - அம்மா
 
அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள அணைத்து காகிதங்களும் பத்தாது
FRIENDSHIP
 
A single candle can illuminate an entire room. A true friend lights up an entire lifetime. Thanks for the bright lights
ரோஜா செடியில்
 
ரோஜா செடியில்
முள்ளும் இருக்கும்
ரோஜாவும் இருக்கும்
முள்ளை கண்டு பயந்து விடாதே !
ரோஜாவை கண்டு மயங்கி விடாதே !
பெண்களும் அப்படித்தானே .......?????/
WELCOME
 
 
Today, there have been 1 visitors (1 hits) on this page!
மெய்யாக...!!! எனக்காக பொய்யாக ஒருமுறை நீ கண்ணீர் விடுவாய் எனில், உனக்காக மெய்யாக இறக்க தயாராக இருக்கிறேன்...!!! This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free